தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் நீண்ட காலமாக கட்டப்பட்டுவருகிறது. நிதிப்பற்றாக்குறையால் கட்டிட வேலைகள் தாமதப்பட்டு வந்தன. இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிப்பதற்கு ரூ. 40 கோடி செலவாகும் என நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் பலர் வழங்கி வருகின்றனர்.
மேலும், திரையுலகில் உள்ள பலரிடமும் நிதியுதவி கேட்க நடிகர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது. கடந்த மாத தமிழக விளையாட்டுத் அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டிட மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி அளித்தார்.
தற்போது, மக்கள் நீதி மய்ய நிறுவனரும், நடிகருமான கமல்ஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நடிகர் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். இந்த நிதியை ஆழ்வார்ப்பேட்டையில் அவரது இல்லத்தில் நடிகர் சங்கத்தலைவர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி பெற்றுக்கொண்டனர்.