முகப்பு சினிமா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும், நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் களம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும், நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் களம்

நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் அணி மற்றும் லோகோ வெளியீடு

by Tindivanam News

கார் ரேஸிங்கில் களமிறங்கும் நடிகர் அஜித்தின் அணியின் லோகோ வெளியானது. நடிகர் அஜித் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார் என தகவல் வெளியானது.

தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா சார்பில் அஜித் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்க யுரோப்பியன் ஜிடி4 சாம்பியன்ஷிப் ரேஸிங் ஈவண்டில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியானது. இதனிடையே, ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற புதிய கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்த்ரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் போர்ஷே 99 GT3 கப் பிரிவில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்கும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில், தற்போது நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியானது. அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

  டாடா ஐபிஎல் (IPL) டி20 கிரிக்கெட் அட்டவணை வெளியீடு

நடிகர் அஜித் இதற்குமுன் நடந்த தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப், ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் ஆகிய ரேஸிங் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole