தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், சமீபத்தில் லியோ எனத் தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கி விஜய் நடித்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் 500 கோடி வசூலையும் தாண்டி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜூம், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களும் அடுத்த படத்தில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரஜினிகாந்தின் 171’வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், இனிமேல் தான் ரஜினிகாந்த் அவர்களுக்கு கதையை எழுத உள்ளேன். எனவும் ஏப்ரலில் தலைவர் 171 படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறினார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.