தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோ குணச்சித்திர நடிகன் என பல வேடங்களிலும் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது மலையாள சினிமாவிலும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தென்னிந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா சிறிது காலம் சினிமாவிற்கு முழுக்கு போட்டு இருந்தார். பின்பு நீண்டகாலம் கழித்து விஜய் சேதுபதி நடித்த இறைவி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு கை கொடுக்க தொடர்ந்து பல படங்களில் பிரமாதமாக நடித்து அசத்தியிருந்தார்.
இந்த நிலையில் தமிழில் அவருக்கு பெரிய மார்க்கெட் இருக்கும் பட்சத்தில் மலையாள சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார் என கோலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன. மலையாள நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் நடிக்கும் 251’வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என தெரியவந்துள்ளது. ஆகவே மலையாள சினிமாவிலும் எஸ்.ஜே.சூர்யா ஒரு கலக்கு கலக்குவார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.