தீபாவளி மற்றும் இந்த வாரம் OTT-ல் வெளிவரும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்…
அக்டோபர் 24 : கோழிபண்ணை செல்லத்துரை அமேசான் ப்ரைம் மற்றும் சிம்பிளி சவுத்
அக்டோபர் 25 : கடைசி உலகப்போர் அமேசான் ப்ரைம் மற்றும் டென்ட்கோட்டா
அக்டோபர் 25 : மெய்யழகன் நெட்பிளிக்ஸ்
அக்டோபர் 25 : ஐந்தாம் வேதம் வெப் தொடர் ஜீபை
அக்டோபர் 31 : லப்பர் பந்து தீபாவளியன்று ஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிளி சவுத்
திரையரங்கில் ரசிகர்களால் எப்படி ஒரு திரைப்படம் கொண்டாடப்படுகிறதோ, அதே போல் அப்படத்தை OTT-ல் கொண்டாடவும் குறிப்பிட்டு ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த வாரம் OTT-ல் வெளிவரவுள்ள தரமான தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் குறித்து கீழே காணலாம்.
மெய்யழகன்:
கார்த்தியின் அட்டகாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் மெய்யழகன். பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 25-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கடைசி உலகப் போர்:
தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பு, இசை, படங்களை இயக்குவது என பல துறைகளில் கலக்கி கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி நடித்தும், இயக்கியும் வெளிவந்த திரைப்படம் கடைசி உலகப் போர். இப்படம் அக்டோபர் 25-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
கோழிப்பண்ணை செல்லதுரை:
சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 20 வெளிவந்த படம் கோழிப்பண்ணை செல்லதுரை. யோகிபாபு, பிரிகிடா, ஏகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த இந்த படம் அக்டோபர் 24 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஐந்தாம் வேதம்:
நடிகை சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், தேவதர்ஷினி, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த வெப் தொடர் ஐந்தாம் வேதம். இந்த தொடர் அக்டோபர் 25-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
லப்பர் பந்து:
லப்பர் பந்து திரைப்படம் ரூ. 6 கோடி பட்ஜெட்டிற்குள் உருவான இப்படம் இதுவரை ரூ. 46கோடிக்கும் அதிகமாக வசூலித்து 50கோடியை நெருங்க உள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்குகளில் நல்ல வசூல் வேட்டை நடத்தும் இப்படம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சிம்பிளி சௌத் மற்றும் ஹெட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.