திண்டிவனம் கிடங்கல் பகுதியில் கிராம நிர்வாக (VAO) அலுவலராக பணியாற்றி வந்தவர் கவுன்சிலிங் மூலம் இறையானூர் ஊராட்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மாறுதலாகி சென்று விட்டார். அதனால் கிடங்கல் பகுதியும் சேர்த்து திண்டிவனம் நகர்புற கிராம நிர்வாக அலுவலருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இருப்பினும், மிகுந்த பணிச்சுமை காரணமாக திண்டிவனம் நகர கிராம நிர்வாக அலுவலரால் சரியாக கிடங்கல் பகுதிக்கு வந்து செல்ல இயலவில்லை. அதனால் கிடங்கல் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ கட்டிடம் பெரும்பாலும் பூட்டியே கிடைக்கின்றது. இதனால், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு வருமானவரிச் சான்றிதழ், பட்டா மாற்றம் மற்றும் சாதிச் சான்றிதழ் போன்ற பல்வேறு அடிப்படை சான்றிதழ்கள் பெறுவதில் பெரும் சிக்கல் நிலவி வருவதுடன் காலதாமதமும் ஏற்படுகிறது. இதனை, உடனடியாக திண்டிவனம் சார் ஆட்சியர் தலையிட்டு கிடங்கல் பகுதிக்கு புதிய கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிடங்கல் பகுதி வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டிவனத்தில் பூட்டிக் கிடக்கும் VAO அலுவலகம்
பொதுமக்கள் சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல்

301