செஞ்சி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பல பள்ளிகளும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடின. அதிலும் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைபள்ளி மாணவிகள் கால்பந்தாட்ட போட்டிகளில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக 17 வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட போட்டிகளில் மகளிர் பிரிவில் குறு மையம் மற்றும் மாவட்ட அளவிலும் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சியில் வரும் டிசம்பர் 2’ம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்குகொள்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் அவர்கள் 18 மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி போட்டியில் வெற்றிபெற பாராட்டினார்.
விளையாட்டு உபகரணங்களை வழங்கிய செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர்
18 மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பாராட்டு

312
முந்தைய செய்தி