தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து வாரச்சந்தைகள் களைகட்ட தொடங்கியுள்ளன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் உள்ள வாரச்சந்தை மிகவும் பிரசித்தம். இங்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமன்றி கள்ளக்குறிச்சி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து கால்நடை வளர்ப்பவர்கள் வியாபாரிகள் என பலரும் வருவதுண்டு. நேற்று, தீபாவளி சிறப்பு வாரச் சந்தை நடைபெற்றது. கால்நடை வளர்ப்பவர்கள் அதிகாலை 3 மணியிலிருந்து விற்பனைக்கு கால்நடைகளை கொண்டு வந்து கொண்டிருந்தனர். செஞ்சி பகுதியை சேர்ந்த வெள்ளாடுகளை வாங்க வெளி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆர்வம் காட்டுவர். அது போலவே நேற்று செஞ்சி வெள்ளாடுகளை வாங்க பெரும் போட்டி நடைபெற்றது. வழக்கத்தைக் காட்டிலும் வெள்ளாடுகளின் விலை 200 முதல் 500 வரை விலை உயர்ந்து விற்பனையானது. செம்மறி ஆடுகள் வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டியதால் செம்மறி ஆட்டின் விலை உயரவில்லை. சுமாராக ஒரு ஆடு 4000 முதல் 7000 வரை விற்பனை ஆனது. காலை 8 மணி வரை நடந்த தீபாவளி சிறப்பு வார சந்தையில் ரூபாய் 5 கோடிகளுக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.

313
முந்தைய செய்தி