நந்தன் கால்வாய் அமைப்பு மூலம் 22 ஏரிகளுக்கு நீர்வரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5260 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட மாதப்பூண்டி, சோ.குப்பம் கணக்கன்குப்பம் மற்றும் விக்ரவாண்டி வட்டத்திற்குட்பட்ட பணமலை ஊராட்சி பகுதிகளில் நந்தன் கால்வாய் திட்டத்தின் மூலம் பாசன வசதி ஏற்படுத்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த திட்டத்தின் மூலம் செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி வட்டங்களில் சுமார் 12 முதல் 37 கிலோமீட்டர் வரை 26 கோடி செலவில் கந்தன் கால்வாயை தூர்வாருதல், கான்கிரீட் அமைத்தல் மற்றும் கட்டுமானங்களை மேம்படுத்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் திரு பழனி அவர்கள், கால்வாயில் உள்ள செடிகளை அகற்றிடவும், கரைகளை பலப்படித்திடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
5000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி தரும் நந்தன் கால்வாய்

312
முந்தைய செய்தி