முகப்பு அறிவிப்புகள் ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு – என்ன காரணம்?

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு – என்ன காரணம்?

வெயில் கொளுத்தும்போது ஷாக் கொடுத்த ஆவின்

by Tindivanam News

தமிழகத்தில் கோடை வெயில் துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. சிலநாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில், தற்போது ஆவின் அறிவிப்பால் மக்களுக்கும் பெரிய ஷாக். ஆமாங்க, ஆவின் ஐஸ்கிரீம் விலை உயரப்போகுது. விரிவா பார்ப்போம் வாங்க.

தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் ஐஸ்கிரீம் கூட்டுறவு நிறுவனம் இயங்கி வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டுமில்லாமல் பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் ஷேக், ஹெல்த் மிக்ஸ், யோகர்ட், பால் பிஸ்கட், சாக்லெட், குல்பி, கப் ஐஸ்கிரீம், சாக்கோ பார், சாக்கோ பீஸ்டு, கசாட்டா, கேன்டி, பிரீமியம் என 100-க்கும் மேற்பட்ட பொருட்களை ஆவின் பாலகங்கள், மற்றும் தனியார் விறபனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்படுகிறது. 65ML . எடை கொண்ட சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 125 ML எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. 100 ML எடை கொண்ட கிளாசிக் கோன் வெண்ணிலா ரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும், 100 ML எடைகொண்ட கிளாசிக் கோன் சாக்லேட் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

  புதிய அரையாண்டுத் தேர்வு அட்டவணை

இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உப பொருட்களை தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்களை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோடை காலத்தில் கூடுதலாக விற்பனையை 20% அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த சிறிய விலையேற்றம் இன்றியமையாததாகும். எதிர்வரும் கோடையை முன்னிட்டு அனைத்து பொதுமக்களும் குழந்தைகளும் ஆவின் நிறுவனத்தின் சுவையான ஐஸ்கிரீமை வாங்கி மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு ஆவின் ஐஸ்கிரீம் பிடிக்குமா, மக்களே ? – கமெண்ட்ல சொல்லுங்க !

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole