முகப்பு அறிவிப்புகள் தொடங்கியது அக்னி நட்சத்திரம் – இனி என்ன செய்ய வேண்டும்?

தொடங்கியது அக்னி நட்சத்திரம் – இனி என்ன செய்ய வேண்டும்?

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன - வாங்க பார்ப்போம்

by Tindivanam News
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன

கடந்த வருடங்களைக் காட்டிலும் இந்த வருடம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி சுடும் நிலையில், தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலும் இன்று மே 4 முதல் துவங்குகிறது.

சரி இந்த அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?
ஜோதிட சாஸ்திரதங்களின் அடிப்படையில் அக்னி நட்சத்திரம் என்பது ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21-ம் நாள் துவங்கி வைகாசி மாதம் 14-ஆம் நாள் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சூரியனின் வெப்பத்தாக்கம் கடுமையாக இருக்கும்.

ஆக, ஜோதிட சாஸ்திர கணிப்புப்படி மொத்தம் 21 நாட்கள் அக்னி நட்சத்திரம் இருக்கும். இந்த காலகட்டமானது மூன்றாகப் பிரிக்கப்பட்டு, முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும். பின், மத்தியில் உள்ள 7 நாட்களில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இறுதியாக, கடைசி 7 நாட்களில் மெதுவாக வெப்ப அளவு குறைந்து இயல்புநிலைக்கு வரும். அதன்படி அக்னி நட்சத்திரம் இந்த வருடம், மே மாதம் 4ம் தேதி இன்று தொடங்குகிறது.

மேலும், இந்த வருடம் அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பநிலை 110 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் கவனத்துடன் இருப்பது அவசியம்.

அக்னி நட்சத்திர காலத்தில் நாம் கடைபிடிக்க வேண்டியவை:

  1. வீட்டில் அனைவரும் மண் பானைகள் வைத்து தண்ணீர் அருந்துவது உபயோகமாக இருக்கும்.
  2. வெயில் காலத்தில், வெளியில் ஆக்சிஜன் அளவு குறைய நேரிடும். அதனால் வெயில்காலம் முடியும்வரையில் மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறியவர்கள், பெரியவர்கள் செல்லவே கூடாது.
  3. நோயாளிகளும், கர்ப்பிணி பெண்மார்களும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்லுங்கள். ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  4. அனைவரும் தினமும் காலையில் மோர் மற்றும் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை அடிக்கடி அருந்தலாம்.
    காபி, டீ போன்றவற்றை சிறிதுநாட்கள் தவிர்த்தால் நல்லது.
  5. இந்த வெயில் காலத்தில் மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் போன்றவற்றை உண்ண வேண்டாம்.
  6. வெயிலில் இருந்து வீடு திரும்பியதும், சிறிது நேரம் கழித்து வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். ஆபத்தில் இருந்து தப்பலாம்.
  அமுதம் அங்காடிகளில் ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள் விற்பனை

மக்கள் அனைவரும் கவனமுடன் செயல்பட்டு, அதிக சிரமம் இல்லாமல் இந்த வெயில் காலத்தை கடந்து செல்வோம்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole