தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடை வைக்க விரும்புவோர்கள் அக்டோபர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்காலிக பட்டாசுக் கடை வைக்க https://www.tnesevai.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ், அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக தெரிவிக்கப்படுகிறது.
அக். 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அனைத்து மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களில் https://www.tnesevai.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். அக்டோபர் 19க்கு பிறகு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அல்லது தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான உரிமத்தை இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அனுமதியின்றி / உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.