இன்னும் ஒரு மாதத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்டுள்ளது. இதற்கு மக்களுடன் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும், படிக்கும் மாணவர்கள் பொங்கலை கொண்டாட ஊர் திரும்ப மிகவும் சிரமப்படுவர்.
சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த வருடமும் பலர் பொங்கல் திருவிழாவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். சென்னையிலிருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகளும் வருடாவருடம் இயக்கப்படும்.
சனவரி திங்கள் 13’ம் நாள் ஊருக்கு செல்வதற்கான அரசு பேருந்துகள் முன்பதிவு இன்று துவங்கியது. பொதுமக்கள் இணையதளம் மூலமாகவோ அல்லது முன்பதிவு மையங்களிலோ டிக்கெட் பதிவு செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த வருடம் அரசு விரைவு பேருந்துகளுடம், அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேருந்து பதிவு செய்ய : TNSTC / SETC BOOKING