தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணமானது இரண்டு பிரிவாக, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண சீரமைப்பு / கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.
அதன்படி, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு, அமல்படுத்தப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட 5 சுங்கச்சாவடிகள் :
- இனம்கரியாந்தல் சுங்கச்சாவடி, திருவண்ணாமலை மாவட்டம்
- தென்னமாதேவி சுங்கச்சாவடி, விழுப்புரம் மாவட்டம்
- மணகெதி சுங்கச்சாவடி, அரியலூர் மாவட்டம்
- கல்லக்குடி சுங்கச்சாவடி, திருச்சி மாவட்டம் ,
- வல்லம் சுங்கச்சாவடி, வேலூர் மாவட்டம்
மேற்கூறிய இடங்களில், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தேர்தல் வாக்குறுதியில் இரண்டு கட்சிகளும் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்த நிலையில், இந்த கட்டண உயர்வு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.