மிஃஜாம் புயல் டிச.5ல் கரையை கடக்க வாய்ப்புள்ள நிலையில், சென்னை காவல்துறை அறிவுறுத்தல்.
சென்னையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மிக்ஜாம் புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம்.
வெளியே பயணிக்க வேண்டியிருந்தால் பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனங்களை பயன்படுத்தவும்-சென்னை காவல்துறை. இடி, புயலின்போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மின்கம்பம், கம்பிகள், உலோக பொருட்கள், மின்னலை ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகியிருக்கவும்-சென்னை மாநகர காவல் ஆணையரகம். கீழே விழுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொட வேண்டாம்; அதன் அருகில் செல்ல வேண்டாம்.
பொதுமக்கள் வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் ஓட்ட வேண்டும்; மேலும், பிரேக்குகளை சரி பார்க்கவும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனங்களை ஓட்ட வேண்டாம்.
வாகனங்களின் வைப்பர்களைச் சரிபார்க்கவும்; மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்; அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண் 100ஐ அழைக்கவும்.