முகப்பு அறிவிப்புகள் தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த புதிய நிபந்தனை

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த புதிய நிபந்தனை

புதிய அறிவிப்பை வெளியிட்டது மின்வாரியம்

by Tindivanam News

தமிழகத்தில் பொதுவாக வீடுகளில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின்கட்டணத்தை, மக்கள் மின்வாரிய அலுவலங்களில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது செயலி மூலமாகவோ செலுத்தி வந்தனர். தற்போது வரை இந்த கட்டணம் செலுத்தும் முறையே அமலில் உள்ளது. இந்த நிலையில் கட்டணம் செலுத்த புதிய நிபந்தனையை மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதம் முதல் 4000 ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை நேரடி பணமாக மின்சார அலுவலகங்களில் செலுத்த முடியாது. இனிமேல், ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்
என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இருப்பினும், அடுத்தடுத்து வரும் மாதங்களில் நேரடியாக செலுத்தும் தொகை படிப்படியாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ₨1000 அல்லது அதற்கு மேலான மின் கட்டணங்களை ஆன்லைனில் மூலமே செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  பெட்ரோல், டீசல் விலை ரூ. 2 குறைப்பு. இன்றைய விலை என்ன?

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole