முகப்பு அறிவிப்புகள் ரூ.2,000 வரை பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி (GST) இல்லை – மக்கள் மகிழ்ச்சி

ரூ.2,000 வரை பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி (GST) இல்லை – மக்கள் மகிழ்ச்சி

தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

by Tindivanam News

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்து மத்திய அரசு மூலம் கருத்து கேட்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.

இந்த நடைமுறை அமலப்டுத்தப்பட்டால் சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உறுப்பினர்கள் பலரும் கூறியதால், இறுதி முடிவு எடுக்காமல் பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளுக்காக நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த குழுவானது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து ஜிஎஸ்டி குழுவுக்கு அறிக்கையை சமர்பிக்கும். எனவே ரூ.2,000 வரையிலான டெபிட், கிரெடிட் கார்டுகள் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி தற்போது இல்லை என பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  தாம்பரத்தில் இருந்து கோயம்பத்தூருக்கு வாரந்திர சிறப்பு ரயில்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole