விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சிப்காட் தொழில் பூங்காவில் 111 ஏக்கர் பரப்பளவில் ரூ.155 கோடி மதிப்பில், நவீன வசதிகளைக் கொண்ட மருந்து பூங்கா பெருங்குழும திட்டத்தின்கீழ் அமைக்கப்படுகின்றது.
தற்போது, சிபிகாட் வளாகத்திலுள்ள இந்த மருந்து பூங்காவில் ஏழு இடங்கள் காலியாக உள்ளதால், சிறு, குறு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
155 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ளத இந்த மருந்துபூங்காவிற்கு, மத்திய அரசு 20 கோடி ரூபாயும், மாநில அரசு 52 கோடி ரூபாயும் நிதி வழங்குகிறது. மேலும் இந்த நிதியில், பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதுசம்பந்தமாக, ‘ஐடிகாட்’ நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரதீப் கூறியதாவது: திண்டிவனம் மருந்து பூங்காவில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்துக்கும், 2 ஏக்கர் வரை நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஏழு நிலங்கள் மட்டுமே காலியாக உள்ளன. இவற்றை பெற, மருந்து மற்றும் மாத்திரை உற்பத்தியில் ஈடுபடும் சிறு, குறு நிறுவனங்கள், ‘சிப்காட்’ வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.