முகப்பு அறிவிப்புகள் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்கள் ஒப்படைப்பு

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்கள் ஒப்படைப்பு

பண்பாட்டு பொக்கிஷங்கள் 4000 ஆண்டுகள் பழமையானவை

by Tindivanam News

பண்பாட்டு பொக்கிஷங்களை சட்டவிரோதமாக கடத்துதல் என்பது நீண்டகால நடந்துகொண்டு இருக்கும் பிரச்னையாகும். இதில், குறிப்பாக இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்க ஒப்படைப்பதாகக் கூறும் பண்பாட்டு பொக்கிஷங்கள் 4000 ஆண்டுகள் பழமையானவை. கி.மு. 2000 – கி.பி. 1900 இடையிலான காலக்கட்டத்தில் இந்தியவின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான கலைப் பொருள்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவை. பிற பொருள்கள் கல், மரம், உலோகம் மற்றும் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.

“டெலாவேர் வில்மிங்டனில் இன்று (செப்.22) நடைபெற்ற க்வாட் உச்சி மாநாட்டின் போது தலைவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகளாவிய நலனுக்காக க்வாட் தொடர்ந்து எவ்வாறு பணியாற்றும் என்ற விவாதங்கள் பயனுள்ளதாக இருந்தது.

  ரயில் முன்பதிவு டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்ற வசதி - ஐ.ஆர்.சி.டி.சி., பரிசீலனை

சுகாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், திறன் மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என மோடி பதிவிட்டுள்ளார்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole