திண்டிவனம் அருகே, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் எனக் கூறி விவசாயியிடம் ரூ. 1.37 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த செங்கேணிக்குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 29; விவசாயி. இவர், இன்ஸ்டாகிராமில், பகுதிநேர பணி என்ற விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர், ஒரு லிங்க்கை அனுப்பினார். கார்த்திகேயன், அந்த லிங்க்கிற்குள் சென்று தனக்கென முகவரி, பாஸ்வேர்டு விபரங்களை பதிவேற்றம் செய்து கொண்டார். டெலிகிராம் ஐடி மூலம் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு அந்த நபர், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினார். கார்த்திகேயன், 200 ரூபாய் செலுத்தி, 250 ரூபாய் திரும்ப பெற்றார். இதையடுத்து, ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 620 ரூபாயை 9 தவணைகளாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு கார்த்திகேயன் அனுப்பினார். டாஸ்க் முடித்த பின்னும், கார்த்திகேயனுக்கு சேர வேண்டிய பணத்தை திரும்ப தராமல் அந்த நபர் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இது குறித்து விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
திண்டிவனத்தில் விவசாயியிடம் ரூ.1.37 லட்சம் பணம் மோசடி
சைபர் கிரைம் போலீசார் விசாரணை

297
முந்தைய செய்தி