முகப்பு குற்றச்செய்திகள் திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்ற மூன்று பேர் கைது

திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்ற மூன்று பேர் கைது

ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து கைது

by Tindivanam News

திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில், போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ரோஷணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் போலீசார் நேற்று மாலை 3:00 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு, போதை மாத்திரைகளை விற்ற எம்.ஜி.ஆர்.நகர் செல்வராஜ் மகன் குணா, 23; சிங்கனுார் விநாயகமூர்த்தி மகன் ரீகன், 30; மரக்காணம் ரோடு ராஜா மகன் வல்லரசு, 24; ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் இந்த வகை மாத்திரைகளை 1,000 ரூபாய்க்கு கூரியர் மூலம் வாங்கி 3,000 ரூபாய்க்கு போதை ஆசாமிகளிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதையடுத்து 3 பேர் மீது ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 அட்டைகள் கொண்ட 80 போதை மாத்திரைகள், சிரஞ்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

  அண்ணனை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற தம்பி

தகவல் : தினமலர்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole