முகப்பு குற்றச்செய்திகள் பள்ளியில் சமைத்து சாப்பிட்ட பலே திருடர்கள்

பள்ளியில் சமைத்து சாப்பிட்ட பலே திருடர்கள்

காவல் துறை விசாரணை செய்து வருகின்றனர்

by Tindivanam News
thieves-cooked-and-ate-at-school-near-marakanam

மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 91 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர், இங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இங்கு காலை சிற்றுண்டி திட்டத்திற்காக சமையலறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் அத்யாவசிய பொருட்கள் தொடர்ந்து திருட்டு போவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த மாதம் கூட இவ்வாறே சமையலறையில் இருந்த எண்ணெய், பருப்பு போன்ற அத்யாவசிய பொருட்கள் மற்றும் மாணவ மாணவிகள் உணவு உண்ணும் தட்டு மற்றும் கிளாஸ் ஆகியவை காணாமல் சென்றுள்ளது, இந்த நிலையில் மீண்டும் கடந்த வெள்ளி இரவு பள்ளியில் நுழைந்த மர்ம திருடர்கள் கும்பல், பூட்டை உடைத்து அத்தியாவசிய பொருட்களை திருடி சென்றதோடு, அங்கேயே செய்வதற்காக பாதுகாப்பாக வைத்திருந்த பொருட்களை திருடி அதை அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு சிலிண்டரை நிறுத்தாமல் கூட சென்றுள்ளனர், இது சனிக்கிழமை அன்று அத்தியாவசிய பொருட்களை இறக்குவதற்கு லாரி வந்தபோது தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சமையலர் மரக்காணம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மரக்காணம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  அறுவடைக்கு தயாரான தர்பூசணிகள் சேதம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole