திண்டிவனத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக போலீசார் ரோந்து பணியில் மற்றும் தணிக்கை பணியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் ஆறு மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. ஆட்டோ ஓட்டுவந்த கிடங்கல் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை விசாரித்த போது திண்டிவனம் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதனை இட்லி மாவு அரைக்கும் அரவை ஆலைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. பின்பு அசோக்கை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 300 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

301
முந்தைய செய்தி