குடிகாரர்கள் குடிபோதை தலைக்கேறினால் என்ன செய்கிறோம் என்று நினைவில்லாமல் இருப்பார்கள் என்று கூறுவதைக் கேட்டதுண்டு. ஆனால் இங்கு ககுடிபோதை அதிகமான கணவன் முட்டைக்குழம்பு செய்து தரவில்லை என மனைவியைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் லாலன் யாதவ் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்துள்ளனர். இதில், லாலன் யாதவ் கல்யாணம் ஆகி ஆறு வருடங்களுக்கு முன்பே மனைவி இறந்துவிட்டார். பின்பு அஞ்சலியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
சம்பவ நாளன்று, நிரம்ப குடித்திருந்த லாலன் யாதவ், அஞ்சலியிடம் முட்டை குழம்பு வைத்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த லாலன் யாதவ் கத்தியால் மற்றும் பெல்ட்டால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அஞ்சலி ரத்த வெள்ளத்தில் சரிந்து, பின் சம்பவ இடத்திலையே துடிதுடித்து இறந்துள்ளார்.
இந்த விஷயம் அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின் குடிபோதையில் கிடந்த லாலன் யாதவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் முட்டைக்குழம்பிற்காக காதலியை கொலை செய்த சம்பவம் குருகிராம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.