தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10’வது 11’வது மற்றும் 12’வது வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும். அதன்படி 2024’ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டார். அதன்படி மார்ச் மாதம் பொது தேர்வுகள் தொடங்கும் எனவும், செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், மே மாதம் பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். பொதுத்தேர்வுக்கான அட்டவணைகள் கீழ் வருமாறு,
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மேலும் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார். இந்த வயதில் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கவனமுடன் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும். சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெறும். பொதுத்தேர்விற்கான கேள்வித்தாள் அதிக கவனமுடன் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களும் கவனமாக திருத்தப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தத்தில் தவறு ஏற்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார். பொதுத்தேர்வுகள் எப்போதும் போல காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1:15 மணிக்கு முடிவு பெறும். அனைத்து தேர்வுகளிலும் கேள்வித்தாளை படித்துப் பார்க்க, தேர்வுத்தாளில் விவரங்கள் குறிப்பிட 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.