முன்னாள் ஜனாதிபதி திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாள் நவம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களின் அறிவியல் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் விதமாக அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவிற்கு அறிவியல் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் முதல் கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் 50 மாணவர்கள் இஸ்ரோவிற்கு சென்று வந்தனர். பின்பு இரண்டாவது கட்டமாக 50 மாணவர்கள் இஸ்ரோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக சேலம் அரசு கல்லூரி முதல்வர் சென்பகலட்சுமி அவர்கள், மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்பு, பேராசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் இஸ்ரோவிற்கு பயணம் மேற்கொண்டனர். அங்கு அவர்கள் செயற்கைக்கோள் தயாரிக்கும் இடத்தையும், ராக்கெட் அருங்காட்சியத்தையும் நேரில் பார்வையிட உள்ளனர்.