திண்டிவனம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு பல மாணவ மாணவியர்களும் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு அளிக்கும் விதமாக திண்டிவனம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ரகுமான் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல சட்டங்களையும் திரைப்படம் மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் இருந்து எடுத்துக்காட்டுகளைக் கூறியும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்படி போராடி வெற்றி பெற வேண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் மாலதி, தனம் மற்றும் கல்லூரியின் முதல்வர் தமிழழகன் வழக்கறிஞர்கள், வட்ட சட்டப்பணிகள் குழுவின் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.