விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், கடவம்பாக்கம் கிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த வருடமும், கடவம்பாக்கம் நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா ,19.02.2024 திங்கட்கிழமை அன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது, ஊராட்சி மன்றத் தலைவர் முனைவர் தெய்வானை பரமசிவம் அவர்களின் தலைமையிலும், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஜெயா, பள்ளி மேலாண்மைக் குழுத் துணைத் தலைவர் சுமதி ருத்திரவேலு, ஊ.ம.துணைத் தலைவர் லட்சுமி தேவராஜ், தலைமை ஆசிரியர் சங்கர், ம.ந.பணியாளர் விஜயராகவன் இவர்களின் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும், பள்ளி ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், சந்தோஷ்குமார், காந்திமதி, ரேவதி, சோனியாகாந்தி. ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுலோச்சனா சுந்தரவேல், நளினி வினோத், ரேவதி பழனி மற்றும் கடவம்பாக்கம் ஊர் பொதுமக்களும், இளைஞர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். ஆண்டு விழாவில். மாணவர்களுக்கு போட்டிகளும், சிறப்பு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.