தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆய்வு செய்யப்பட்டு, தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
அதன்படி மழைக்காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளி நாட்களை ஈடு செய்யும் விதமாக இனிவரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறுவது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே தன்னிச்சையாக முடிவு செய்யலாம் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.