செஞ்சி அருகில் நாட்டார்மங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்திலுள்ள மாணவர்கள் பலரும் பயின்று வருகின்றனர். சமீபத்தில் இந்த பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி குழுமத் தலைவர் செஞ்சி பாபு தலைமைத் தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார். செயலாளர் ஐயப்பன், பொருளாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அருகில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்களுடைய பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். காற்றாலை மின்சாரம், போக்குவரத்து மேம்பாடு, கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற பல படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை மாணவர்களும் பெற்றோர்களும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். கண்காட்சியில் இடம்பெற்ற சிறப்பான படைப்புகளுக்குப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ராஜா தேசிங்கு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கண்காட்சியை மாணவர்கள் பெற்றோர்கள் பார்வையிட்டனர்

286
முந்தைய செய்தி