தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து இருந்ததாலும், பாராளுமன்றத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை’யினாலும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் நீண்ட கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் ஜூன் 6-ம் தேதி அனைத்து பள்ளிகளையும் திறக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, பள்ளிகளை திறப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, தமிழ்நாடு கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் இறுதி தேர்வு நடத்தப்பட்டு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்படும். பின்பு, ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். எனினும், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற்று, முடிவுகள் வெளியாக இருப்பதால் குழந்தைகளுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், ஜூன் மாதம் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, அன்றைய தினமே 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 2024 – 25-ம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
எனவே, மாணவ – மாணவியர்கள் அனைவரும் ஜூன் 6’ம் தேதி முதல் பள்ளி செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.