தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை தமிழ்நாடு அரசு மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 107 மையங்களில், 12616 பள்ளிகளை சேர்ந்த 4,57,525 மாணவர்களும், 4,52,498 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் எழுதினர். அவர்களோடு, 28,827 தனித்தேர்வர்களும், 235 சிறைவாசிகளும் 10ம் வகுப்பு தேர்வை எழுதினர். பின்பு, தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டு, இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேர்வு முடிவுகள் அறிய:
மறு மதிப்பீடு விண்ணப்பம் செய்ய : மாணவர்கள் அனைவரும், 15.05.2024 முதல் 20.05.2024 வரை தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் விகிதங்கள்:
மொத்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை; 8,94,264
தேர்ச்சி மெற்றவர்கள்; 8,18,743
மொத்த தேர்ச்சி விகிதம் : 91.55%
தேர்வு எழுதிய மாணவியர் எண்ணிக்கை; 4,47,061
தேர்வு எழுதிய மாணவர் எண்ணிக்கை; 4,47,203
மாணவியர் தேர்ச்சி விகிதம் : 4,22,591 (94.53%)
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் : 3,96,152 (88.58%)
தமிழகத்தில் முதல் பத்து இடம் பிடித்த மாவட்டங்கள்:
1. அரியலூர் – 97.31 %
2. சிவகங்கை – 97.02 %
3. ராமநாதபுரம் – 96.36 %
4. கன்னியாகுமரி – 96.24 %
5. திருச்சி – 95.23 %
6. விருதுநகர் – 95.23 %
7. ஈரோடு – 95.08 %
8. பெரம்பலூர் – 94.77 %
9. தூத்துக்குடி – 94.39 %
10. விழுப்புரம் – 94.11 %