ஆண்டுதோறும் தமிழக பாடக்கல்வித் திட்டத்தின்கீழ் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். இதற்கான அட்டவணை சமீபத்தில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை கீழ் வருமாறு:
இந்த அட்டவணையில் ஆங்கிலம் தேர்வு முடிந்து மூன்று நாட்கள் கணித தேர்வுக்கு தயாராக காலம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மூன்று நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும், ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையாகவும் வருகிறது. எனவே, கணித தேர்வை வேறு தேதியில் மாற்றி அமைக்க பட்டதாரி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.