முகப்பு தேர்தல் 18’வது பாராளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு, தமிழ் நாட்டில் எப்போது?

18’வது பாராளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு, தமிழ் நாட்டில் எப்போது?

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு.

by Tindivanam News

நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் எப்போது வெளிவரும் என மக்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், 18வது பாராளுமன்றத் தேர்தளுக்கான தேதியினை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி, 18வது பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 கட்டங்களாக நடைபெறும் தேதிகள்:-

முதற்கட்டம் – ஏப்ரல் 19
2ம் கட்ட தேர்தல் – ஏப்ரல் 26
3ம் கட்ட தேர்தல் – மே 7
4ம் கட்ட தேர்தல் – மே 13
5ம் கட்ட தேர்தல் – மே 20
6ம் கட்ட தேர்தல் – மே 25
7ம் கட்ட தேர்தல் – ஜுன் 1

மேலும், 7 கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, மொத்த வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் எப்போது தெரியுமா ?

ஏழு கட்டமாக நடைபெறும் தேர்தலில், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ல் தேர்தல் நடைபெறுகின்றது. மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

  விக்கிரவாண்டியில் ரூ.1.07 கோடி ரொக்கம் 27 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

தமிழக தேர்தல் தேதிகள் :-

  1. வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20
  2. வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27
  3. வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28
  4. திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
  5. வாக்குப்பதிவு: ஏப்ரல் 19
  6. வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வருகின்றன.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole