முகப்பு தேர்தல் மக்களவை தேர்தல் 2024 – நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தல் 2024 – நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

வீரப்பன் மகள் வித்யா ராணியும் போட்டி.

by Tindivanam News

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மிகத்தீவிரமாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. நேற்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் நா.த.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்துவைத்தார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமாக 40 வேட்பாளர்கள் பொதுக்கூட்ட மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 40 வேட்பாளர்களில் 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் உள்ளனர். சீமான் களமிறங்காத நிலையில் கட்சியைச் சேர்ந்த பல நிர்வாகிகளுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்:-

  1. திருவள்ளூர் தொகுதி – மு.ஜெகதீஷ் சந்தர்
  2. வடசென்னை தொகுதி – DR அமுதினி
  3. தென் சென்னை தொகுதி – முனைவர் சு.தமிழ்ச்செல்வி
  4. மத்திய சென்னை தொகுதி – முனைவர் இரா.கார்த்திகேயன்
  5. திருப்பெரும்புதூர் தொகுதி – DR வெ.ரவிச்சந்திரன்
  6. காஞ்சிபுரம் (தனி) தொகுதி – வி.சந்தோஷ்குமார்
  7. அரக்கோணம் தொகுதி – பேராசிரியர் அப்சியா நஸ்ரின்
  8. வேலூர் தொகுதி – தி.மகேஷ் ஆனந்த்
  9. தருமபுரி தொகுதி – DR கா.அபிநயா
  10. திருவண்ணாமலை தொகுதி – DR ரா.ரமேஷ்பாபு
  11. ஆரணி தொகுதி – DR கு.பாக்கியலட்சுமி
  12. விழுப்புரம் தொகுதி – இயக்குநர் மு.களஞ்சியம்
  13. கள்ளக்குறிச்சி தொகுதி – இயக்குநர் ஆ. ஜெகதீசன்
  14. சேலம் தொகுதி – மருத்துவர் க. மனோஜ்குமார்
  15. நாமக்கல் தொகுதி – பொறியாளர் க.கனிமொழி
  16. ஈரோடு தொகுதி – மருத்துவர் மு.கார்மேகன்
  17. திருப்பூர் தொகுதி – மா.கி.சீதாலட்சுமி
  18. நீலகிரி(தனி) தொகுதி – ஆ.ஜெயகுமார்
  19. கோயம்புத்தூர் தொகுதி – ம. கலாமணி ஜெகநாதன்
  20. பொள்ளாச்சி தொகுதி – மருத்துவர் நா.சுரேஷ் குமார்
  21. திண்டுக்கல் தொகுதி – மருத்துவர் கைலைராஜன் துரைராஜன்
  22. கரூர் தொகுதி – மருத்துவர் ரெ.கருப்பையா
  23. திருச்சி தொகுதி – ஜல்லிக்கட்டு ராஜேஷ்
  24. பெரம்பலூர் தொகுதி – இரா. தேன்மொழி
  25. கடலூர் தொகுதி – வே.மணிவாசகன்
  26. சிதம்பரம் தொகுதி – ரா. ஜான்சி ராணி
  27. மயிலாடுதுறை தொகுதி – பி.காளியம்மாள்
  28. நாகப்பட்டினம் தொகுதி – மு.கார்த்திகா
  29. தஞ்சாவூர் தொகுதி – ஹூமாயூன் கபீர்
  30. சிவகங்கை தொகுதி – வி.எழிலரசி
  31. மதுரை தொகுதி – முனைவர் மோ.சத்யாதேவி
  32. தேனி தொகுதி – மருத்துவர் மதன் ஜெயபால்
  33. விருதுநகர் தொகுதி – மருத்துவர் சி.கௌசிக்
  34. ராமநாதபுரம் தொகுதி – மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால்
  35. தூத்துக்குடி தொகுதி – மருத்துவர் ரொவினா ரூத் ஜேன்
  36. தென்காசி தொகுதி – சி.ச. இசை மதிவாணன்
  37. திருநெல்வேலி தொகுதி – பா.சத்யா
  38. கன்னியாகுமரி தொகுதி – மரிய ஜெனிபர்
  39. கிருஷ்ணகிரி தொகுதி – வித்யா வீரப்பன்
  40. புதுச்சேரி தொகுதி – மருத்துவர் ரா.மேனகா
  புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

எப்போதும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிடும் நாம் தமிழர் கட்சியினர் எத்தனை தொகுதிகளை வெல்வார்கள் ? கமெண்ட்ஸில் சொல்லுங்க…

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole