தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சனையாக மாறிவருகிறது. ஒரே மாதிரியான படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிப்பது, தொழில்முனைவோர்களின் பற்றாக்குறை போன்ற பலக் காரணிகளால் நன்கு படித்தவர்களும் வேலையில்லாமல் அல்லல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு வேலைக்காக 50.14 லட்சம் பதிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை தொடா்பான புள்ளிவிவரங்களை அரசின் சார்பில் வெளியிடப்படும். அதன்படி, ஆகஸ்ட் மாத கணக்கின்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 50 லட்சத்து 14 ஆயிரத்து 803’ஆக உள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட தகவலில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி பதிவு செய்துள்ள மொத்த பதிவுதாரா்களில் கணக்கு கீழ்வருமாறு,
பெண்கள் – 27,11,970
ஆண்கள் – 2,302,555
மூன்றாம் பாலினம் – 278
இவா்களில்,
18 வயது வரையுள்ள பள்ளி மாணவா்கள் – 9,95,449
19 முதல் 30 வயதுவரையுள்ள கல்லூரி மாணவா்கள் – 21,72,50 பேரும்
31 முதல் 45 வயதுவரையுள்ளவர்கள் – 15,90,631
46 முதல் 60 வயதுவரையுள்ளவா்கள் – 2,47,829
அரசு பணி ஓய்வு வயதான 60 வயதைக் கடந்தவா்களில் 8,094 பேரும் பதிவு செய்திருக்கிறாா்கள். மேலும், ஒட்டுமொத்த பதிவுதாரா்களில் 1.50 லட்சம் போ் மாற்றுத்திறனாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.