அரசு வேலைவாய்ப்புகளில் இணைய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது மிகவும் அவசியமான ஒன்று. இந்நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 54.81 லட்சம் பதிவு செய்துள்ளதாக என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த மாதம் பிப்.29-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. அந்த செய்திக் குறிப்பில் இடம்பெற்ற விபரங்கள் கீழ்வருமாறு,
தமிழ்நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை மொத்தம் 54,81,564 ஆகும். அதில், ஆண்களின் எண்ணிக்கை 25,26,487 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 29,54,,792 ஆகும். மேலும், மூன்றாம் பாலினத்தவா்கள் 285 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்துள்ளனர். இந்த எண்ணிக்கையில், வயது வாரியாக பதிவுதாரா்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி,
- 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் – 11,495 பேரும்,
- 19 முதல் 30 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 24,12,771 பேரும்,
- 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 17,21,980 பேரும் உள்ளனா்,
- 46 வயது முதல் 60 வயது வரையுள்ள முதிா்வு பெற்ற பதிவுதாரா்களின் எண்ணிக்கை 2,39,391
இந்த எண்ணிக்கையானது, தற்போது 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வை மாணவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும்போது மேலும் உயரக்கூடும்.