அக்டோபர் 4’ஆம் தேதி வரை எஸ்.பி.ஐ., வங்கியில் உதவி மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்.பி.ஐ., வங்கியில் உதவி மேலாளர், துணை மேலாளர் என 1511 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் : அக்டோபர் 4.
பணியிடங்கள் :
- துணை மேலாளர் ( ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் & டெலிவரி)- 187
- துணை மேலாளர் ( இன்ப்ரா சப்போர்ட் & கிளவுட் ஆபரேஷன்ஸ்)- 412
- துணை மேலாளர் ( நெட்வொர்க்கிங் செயல்பாடுகள்)- 80
- துணை மேலாளர் ( IT, ஆர்க்கிடெக்சர் )- 27
- துணை மேலாளர் ( தகவல் பாதுகாப்பு) – 7
கல்வித் தகுதி :
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பி.இ., -பி.டெக், – எம்.எஸ்.சி., – எம்.சி.ஏ., – எம்.இ., – எம்.டெக்., ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவமும் தேவை.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் :
விண்ணப்ப கட்டணம் ரூ.750. எஸ்.சி., எஸ்.டி., பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்ய :
https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.