முகப்பு இந்தியா தொழிலதிபர் ரத்தன் டாடா உயில் – யார் யாருக்கு எவ்வளவு சொத்து?

தொழிலதிபர் ரத்தன் டாடா உயில் – யார் யாருக்கு எவ்வளவு சொத்து?

சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கு சொத்து

by Tindivanam News

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு சொத்துக்கள் அதிகம். அந்த சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதி இருக்கிறார்.

அதில் உள்ள விவரங்கள் பின்வருமாறு.

  • ரத்தன் டாடாவின் ரூ.10,000 கோடிக்கு மேலான சொத்துக்களில் இருந்து பெரும்பகுதி டாடா அறக்கட்டளைக்கு செல்லும்.
  • அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா (தாயின் இரண்டாது திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள்) ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி செய்துள்ளார்.
  • ரத்தன் டாடாவிடம் நீண்ட நாளாக வேலை பார்த்து வருபவர் ராஜன் ஷா. இவருக்கு தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ள டாடா, தன் வளர்ப்பு நாயான டிட்டோவை ராஜன் ஷா கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்.
  • தன்னிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் சொத்துக்களை டாடா எழுதி வைத்துள்ளார்.
மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சிக்கன் 65

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole