வீடு, கடைகளுக்கு முன்பு வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக, டெல்லி ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது. அத்துடன், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் சில யோசனைகளை நீதிபதி வழங்கியிருக்கிறார். இது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது. நம்முடைய சென்னையை பொறுத்தவரை, சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. அதனால்தான், எந்தவொரு நிறுவனமும், வீட்டின் உரிமையாளரும், “நோ பார்க்கிங்” போர்டு தங்களது வீடுகள், நிறுவனங்கள் முன்பு வைக்கக்கூடாது என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
வழக்கு விசாரணை: இப்படிப்பட்ட சூழலில், டெல்லியில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.. இதில், ஒரு மனுதாரா், தன்னுடைய வீடு மற்றும் கடைக்கு முன்பு வாகனங்களை நிறுத்துவது சட்டவிரோதமானது என்று கூறி ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் நருலா, “குறுகிய குடியிருப்பு பாதைகளில் வாகனங்களை நிறுத்துவது குறித்து மனுதாரா் எழுப்பியிருக்கும் பிரச்சனை, டெல்லி உள்பட பல நகா்ப்புறவாசிகள் எதிா்கொள்ளும் பொதுவான நிலையைப் பிரதிபலித்துள்ளது.
வாகனங்கள்: குறிப்பாக பெருகிவரும் தனியாா் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்த உள்கட்டமைப்புவசதி கொண்ட மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் இந்த நிலைமை உள்ளது. இந்த பிரச்சினையானது, ஒரு பெரிய நகா்ப்புற திட்டமிடல் தோல்வியின் அறிகுறியாகும். அங்கு காலனிகள் பாா்க்கிங் வசதிகள் குறித்து போதிய முன்னோக்கு இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு அதிகாரிகளும், மாநில அரசும் துணை போகின்றன. இதனால், தெருக்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர குடியிருப்பாளா்களுக்கு வேறு வழியில்லை.. இப்படிப்பட்ட சூழலில், இதுபோன்ற சிக்கலான பிரச்சனையில் நீதிமன்றம் தலையிடும் முன் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நகர்ப்புற உள்கட்டமைப்பு: இந்த பரந்த நகா்ப்புற உள்கட்டமைப்பு குறைபாடுகளை நீதிமன்றம் நிவா்த்தி செய்ய முடியாது அல்லது நகரம் முழுவதும் உள்ளூர் பிரச்சனை இருக்கும்போது குறிப்பிட்ட நபா்களை தனிமைப்படுத்தவும் முடியாது.. எனினும், குடியிருப்பு காலனிகளில் பிரத்யேக பாா்க்கிங் இடங்கள் இல்லாதது ஒரு குடிமை பிரச்சனையாகும். பாா்க்கிங் வசதிகள் குறித்து போதிய முன்னோக்கு இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு தெருக்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர குடியிருப்பாளா்களுக்கு வேறு வழியில்லை. இது தனிநபா் தகராறுகளில் நீதித்துறை தலையீட்டை விட மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து கொள்கை அடிப்படையிலான பதில் தேவைப்படுகிறது.
குடியிருப்பு பகுதிகள்: எனவே, சாலையிலும், குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும், பாதையில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சட்டவிரோத செயலுக்குப் பதிலாக, பரந்த நகா்ப்புற சவாலில் இருந்து இந்த பிரச்சனை எழுகிறது என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம்.. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை செய்து தீர்வு காண வேண்டும்.. மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து கொள்கை அடிப்படையிலான பதில் தேவைப்படுகிறது” என்று நீதிபதி அறிவுறுத்தியிருக்கிறார். குடியிருப்புக் காலனிகளில் வாகன நிறுத்துமிட பிரச்சனை குறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் இப்படியொரு யோசனையை தெரிவித்திருப்பது தமிழகத்தின் கவனத்தையும் பெற்று வருகிறது.