ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் உள்ள முகேஷ் அம்பானி, தனது சொத்துக்களில் இன்னொரு விலை உயர்ந்த விஷயத்தை சேர்த்துள்ளார்.
இந்தியாவின் முதல் போயிங் 737 MAX 9-ஐ என்ற ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார், இது இந்தியாவின் தொழிலதிபர்கள் வைத்திருக்கும் மிகவும் விலையுயர்ந்த தனியார் ஜெட் விமானமாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 987 கோடி என்று கூறப்படுகிறது. ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி 9.2 லட்சம் கோடி நிகர மதிப்புடன் உள்ளார் முகேஷ் அம்பானி. அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு முகேஷ் அம்பானி புதியவர் கிடையாது. அதன்படி அவர் சமீபத்தில் போயிங் 737 மேக்ஸ் 9 என்ற ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார். இந்த ஜெட் விமானத்தின் விலை $118.5 மில்லியன் ஆகும். இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 987 கோடி. டைம்ஸ் நவ் அறிக்கையின்படி, இதற்கான ஒட்டுமொத்த செலவு ரூ. 1,000 கோடியைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.
போயிங் 737 மேக்ஸ் 9-இன் அம்சங்கள்:
- போயிங் 737 மேக்ஸ் 9, அதன் சிறந்த அம்சத்திற்காகவும் வசதிக்காகவும் அறியப்படுகிறது. அதன் முன்னோடியான போயிங் மேக்ஸ் 8-ஐ விட விசாலமான கேபினைக் கொண்டுள்ளது.
- இரண்டு CFMI LEAP-1B இன்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ஜெட், ஒரே பயணத்தில் 6,355 கடல் மைல் (11,770 கி.மீ) தூரத்தை கடக்கும் என்றும் கூறப்படுகிறது.
- அதன் வேகம், ஆடம்பரம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாக உலகளவில் சிறந்த தனியார் ஜெட் விமானங்களில் ஒன்றாக உள்ளது.