பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின் பிங்கை சந்தித்து பேசினார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். அங்கு, ரஷ்ய அதிபர் புடின், ஈரான் அதிபர் உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருந்தார். மாநாட்டின் இரண்டாம் நாளில் பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்து பேசினார். எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் மற்றும் எல்லையில் ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இருவரும் பேச்சு நடத்தியதாக தெரிகிறது. எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினர் மோதிக்கொண்ட பிறகு, இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நிகழவில்லை. ஐந்தாண்டுக்கு பிறகு இப்போது தான் முதன் முறையாக சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.