முகப்பு இந்தியா தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் – பிரதமர் மோடி

தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் – பிரதமர் மோடி

பிரதமர் மோடி பெருமிதம்

by Tindivanam News
Prime Minister Narendra Modi flew in India's Tejas fighter jet

பிரதமர் மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார்.
பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். மையத்தில் பிதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார் பிரதமர் மோடி. இந்த அனுபவம் நமது நாட்டின் தற்சார்பு திறன் மீதான நம்பிக்கையை உயர்த்தியது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள்:

பிரதமர் மோடி தனது பதிவில், தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது, நமது நாட்டின் தற்சார்பு திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது, மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  இந்திய இளம் பெண்களிடயே அதிகரிக்கும் மாா்பக புற்றுநோய் - அதிர்ச்சித் தகவல்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole