காஷ்மீர் என்றாலே குண்டுவெடிப்பு, தீவிரவாதம் என்று மக்கள் நினைத்திருந்தபோது, அதை மாற்றியெழுதிய போலீஸ்காரர்தான் ராஸ்மி ரஞ்சன் ஸ்வாய்ன்.
ஜம்மு கஷ்மீரத்தின் DGP. இருந்த ராஸ்மி சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவர், 1991ல் IPS முடித்து, பல்வேறு பணிகளுக்குப் பிறகு 15 வருடங்கள் இந்திய உளவுப்பிரிவில் பணியாற்றி, பின் 2020ல் ஜம்மு மற்றும் காஸ்மீரில் CID பிரிவின் ADGPஆகச் சேர்ந்தார். 2023ல் சட்டம்-ஒழுங்கு DGP ஆகி தற்போது ஓய்வு பெறுகிறார்.
இவரை, அப்துல்லா, முஃப்தி கட்சியினர் போலீஸ் என்றாலே தங்களை பயப்பட வைத்தவர் என்றும், சொல்பேச்சு கேட்ட போலீஸ்காரர்களைக் கிரிமினல்களாக ஆக்கியவர் என்றும் இவரை ஏசுகிறாரகள். வெளியாள் என்று ஏசினாலும் 370 இல்லாததால் ஏதும் செய்ய முடியாமல் திணறிப்போனார்கள்.
தீவிரவாதிகளுக்குப் பணம் வரும் வழிகள் உதவும் ஆட்கள், அரசு ஊழியர்கள் என்று கண்டுபிடித்துக் கருணை காட்டாது பணிநீக்கம் செய்து சிறையில் தள்ளினார். 370 நீக்கத்துக்குப் பிறகு வெளியாட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி அமைதி திரும்ப வைத்ததில் இவர் பங்கு மகத்தானது என்று சொல்லப்படுகிறது.