தமிழ்நாடு முழுவதும் அதிமுக கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் எம்.எல்.ஏ திரு.அர்ஜுனன் தலைமையில் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளர் திருமதி. சசிரேகா கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வின்போது கிடங்கல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் போதையில் கூட்ட மேடையில் ஏற முயற்சி செய்தார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்பு விசாரிக்கையில் அவர் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்த சரவணன் என்பதும் அவரின்மேல் கஞ்சா, திருட்டு போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்தது. மீண்டும் கூட்டம் முடிந்து புறப்பட்ட திருமதி. சசிரேகாவின் காரை மறித்தும் ரகளையில் ஈடுபட்ட சரவணனை போலீசார் இழுத்துச் சென்றனர்.

306
முந்தைய செய்தி