முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு, சென்னையில் கம்பீரச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மாதிரி சிலையை, அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வி.பி.சிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநில கல்லூரியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங் சிலை அமைப்பதற்கான மகத்தான வாய்ப்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகிறேன்-வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
வி.பி. சிங்குக்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு. வி.பி.சிங் வாழ்வு மற்றும் வரலாறு குறித்து இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும். 11 மாதமே பிரதமராக இருந்தாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானது.
வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் அல்ல, ஏழையும் இல்ல. ஆனாலும் பிற்படுத்தப்பட்ட ஏழை சமூகத்திற்காக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி காண்பித்தார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சமூகநீதி பயணத்தில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். எங்கெல்லாம் புறக்கணிப்பு, தீண்டாமை, அநீதி உள்ளதோ அதை தீர்க்க வேண்டிய மருந்துதான் சமூகநீதி. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும்; இதை கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைக்க வேண்டும். வி.பி.சிங் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது, மறக்காது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்