தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவக்கியுள்ளார். இந்த கட்சியின் சார்பில் வரும் அக்டோபர் 27ந் தேதியன்று விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெற உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 27ந் தேதியன்று மழை பெய்தால் மாநாடு பிசுபிசுத்துவிடுமோ என்ற அக்கட்சி தொண்டர்கள் கவலையில் இருந்தனர்.
அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக வங்க கடலில் அந்தமான் அருகே உருவாக உள்ள புதிய புயல் வடக்கு நோக்கி நகரும் போது தமிழக பகுதிகளில் உள்ள மழை மேகங்களை ஈர்த்துவிடும் என்பதால் அக்டோபர் 27ந் தேதி விக்கிரவாண்டி பகுதியில் மழைக்கான வாய்ப்பு வெகு குறைவு என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அக்கட்சியினருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.