தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல், Exit Poll) வெளியிடப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி இன்று வரை நடைபெற்றன. இந்த தேர்தல்களில் பதிவான அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பல்வேறு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை : 93
சத்தீஸ்கரில் 90 தொகுதிகளில் காங்கிரஸ் 40-50, பாஜக 36-46 இடங்களை பெறலாம் – இந்தியா டுடே
காங்கிரஸ் 42-53, பாஜக 34-45 இடங்களை பெறலாம் – ஜன் கீ பாத்
காங்கிரஸ் 37 இடங்கள், பாஜக 23 இடங்கள் கிடைக்கலாம் – இந்தியா டிவி
காங்கிரஸ் 54-66, பாஜக 29-39 தொகுதிகள் கிடைக்கலாம் – TV5
காங்கிரஸ் 49, பாஜக 38, மற்றவை 3 தொகுதிகளை கைப்பற்றலாம் – CNN