பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டார். தேமுதிக கட்சிக்கு ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மதம் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதகாலம் கூட இல்லாதநிலையில், தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. ஒருபுறம், தேர்தலை முன்னிட்டு ஆளும் திமுக அரசு கூட்டணி பங்கீடு முடித்து, வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டனர். மறுபுறம், கூட்டணி பங்கீட்டில் கலக்கத்தில் இருந்த அதிமுக தொண்டர்களுக்கு தற்போது ஆறுதலாக பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதன்படி, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் :-
👉 வடசென்னை தொகுதி – ராயபுரம் மனோகரன்
👉தென் சென்னை தொகுதி – ஜெயவர்தன்
👉காஞ்சிபுரம் தொகுதி – ராஜசேகர்
👉அரக்கோணம் தொகுதி – விஜயன்
👉ஆரணி தொகுதி – கஜேந்திரன்
👉கிருஷ்ணகிரி தொகுதி – ஜெயப்பிரகாஷ்
👉விழுப்புரம் தொகுதி – பாக்கியராஜ்
👉சேலம் தொகுதி – விக்னேஷ்
👉நாமக்கல் தொகுதி – தமிழ்மணி
👉ஈரோடு தொகுதி – ஆற்றல் அசோக்குமார்
👉கரூர் தொகுதி – தங்கவேல்
👉சிதம்பரம் தொகுதி – சந்திரஹாசன்
👉மதுரை தொகுதி – சரவணன்
👉தேனி தொகுதி – நாராயணசாமி
👉நாகை தொகுதி – சுர்ஜித் சங்கர்
👉இராமநாதபுரம் தொகுதி – ஜெயபெருமாள்
மேலும் கூட்டணிக் கட்சிகள் விவரம்:-
👉தேமுதிக – விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
👉புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு