முகப்பு அரசியல் பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவித்த அண்ணாமலை – தொண்டர்கள் ஆரவாரம்

பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவித்த அண்ணாமலை – தொண்டர்கள் ஆரவாரம்

பாஜக சின்னத்தில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள்

by Tindivanam News

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். திமுக, அதிமுக என பிரதான கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்ட நிலையில், இன்றுடன் தொகுதி பங்கீடு முடிந்து பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் 9 பாஜக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலில் இருக்கும் அனைவருமே நட்சத்திர வேட்பாளர்களாவர்.

பாஜக வேட்பாளர்களின் பட்டியல் :-

  1. தென் சென்னை – தமிழிசை சௌந்தரராஜன்.
  2. மத்திய சென்னை – வினோஜ் P. செல்வம்.
  3. வேலூர் – AC சண்முகம்.
  4. கிருஷ்ணகிரி – நரசிம்மன்.
  5. நீலகிரி – எல்.முருகன்.
  6. கோயம்புத்தூர் – அண்ணாமலை.
  7. பெரம்பலூர் – பாரிவேந்தர்.
  8. தூத்துக்குடி – நயினார் நாகேந்திரன்.
  9. கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்.

மேலும், இன்று பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலும் வெளியானது. அவை, காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகள் ஆகும்.

  5 மாநில தேர்தலுக்கு பின்பு, தெலுங்கானா தேர்தல் கருத்துக்கணிப்பு

கோயம்புத்தூர் தொகுதியில், தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை களமிறக்கப்படுவது பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole